வழிபாடு
திருப்பதி ராமச்சந்திரா புஷ்கரணி பகுதியில் நடந்தமகா சாந்தி யாகம் மஹாபூர்ணாஹுதியுடன் நிறைவு

திருப்பதி ராமச்சந்திரா புஷ்கரணி பகுதியில் நடந்தமகா சாந்தி யாகம் மஹாபூர்ணாஹுதியுடன் நிறைவு

Published On 2022-02-15 03:50 GMT   |   Update On 2022-02-15 03:50 GMT
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி ராமச்சந்திரா புஷ்கரணியில் மகாபூர்ணாஹுதியுடன் மகா சாந்தி யாகம் நிறைவடைந்தது.
கொரோனா வைரஸ் ஒழியவும், உலக நன்மைக்காக வேண்டியும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி ராமச்சந்திரா புஷ்கரணி பகுதியில் 3 நாள் மகா சாந்தி யாகம் நடந்தது. நிறைவு நாளான நேற்று புண்யாவதனம், விஸ்வ சேனர் வழிபாடு, சங்கல்ப பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க ஹோமம் நடத்தப்பட்டது. நேற்று மகாபூர்ணாஹுதியுடன் மகா சாந்தி யாகம் நிறைவடைந்தது.

யாகத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன், தர்மகிரி வேதயியல் பீட வைகானச ஆகம பண்டிதரான சீனிவாச தீட்சிதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News