ஆன்மிகம்
திருச்சிற்றம்பலம் செருவாவிடுதி கடைவீதியில் கட்டப்பட்டு வரும் சிவசக்தி விநாயகர் கோவிலை படத்தில் காணலாம்.

திருச்சிற்றம்பலம் அருகே செருவாவிடுதி சிவசக்தி விநாயகர் கோவிலில் திருப்பணிகள் மும்முரம்

Published On 2021-09-20 05:39 GMT   |   Update On 2021-09-20 05:39 GMT
திருச்சிற்றம்பலம் அருகே செருவாவிடுதி சிவசக்தி விநாயகர் கோவிலில் திருப்பணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் விரைவில் குடமுழுக்கு நடத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே செருவாவிடுதி கடைவீதியில் இருந்த ஒரு ஆலமரத்தின் அடியில் சிவசக்தி விநாயகர் கோவில் அமைந்திருந்தது. பழமை வாய்ந்த இந்த கோவில், கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலின் போது ஆலமரம் சாய்ந்ததால், கோவில் முழுமையாக சேதம் அடைந்தது.

இதைத்தொடர்ந்து அதே இடத்தில் சிவசக்தி விநாயகர் கோவிலை கட்ட சித்துக்காடு மற்றும் செருவாவிடுதி பகுதிகளை சேர்ந்த வெள்ளையன் சேர்வை வகையறாக்களும் பொதுமக்களும் கடைத்தெரு வியாபாரிகளும் முடிவு செய்தனர். தற்போது இந்த கோவிலில் திருப்பணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனவே கோவிலின் திருப்பணி வேலைகளை விரைவில் முடித்து, குடமுழுக்கை நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News