விளையாட்டு
சதமடித்த தனஞ்செயா டி சில்வா

2வது டெஸ்டில் தனஞ்செயா டி சில்வா அபார சதம் - 279 ரன்கள் முன்னிலை பெற்றது இலங்கை

Published On 2021-12-02 20:57 GMT   |   Update On 2021-12-02 20:57 GMT
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணி வீரர் தனஞ்செயா டி சில்வா மற்றும் லசித் எம்புல்டெனியா ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்துள்ளது.
காலே:

இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை முதல் இன்னிங்சில் 204 ரன்னில் ஆல்அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரர் நிசாங்கா 73 ரன்கள் எடுத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் வீரசமி பெர்மவுல் 5 விக்கெட்டும் ஜோமேல் வாரிகன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 253 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. கேப்டன் பிராத்வெயிட் 74 ரன்கள் எடுத்தார்.

இலங்கை சார்பில் ரமேஷ் மெண்டிஸ் 6 விக்கெட்டும், எம்புல்டெனியா, ஜெயவிக்ரமா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி தொடக்கத்தில் தடுமாறியது. அந்த அணியின் நிசங்கா அரை சதமடித்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தனஞ்செயா டி சில்வா பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

இறுதியில், நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் எடுத்துள்ளது. தனஞ்செயா டி சில்வா 153 ரன்களும், லசித் எம்புல்டெனியா 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதன்மூலம் இலங்கை அணி வெஸ்ட் இண்டீசை விட 279 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் பெர்மவுல் 3 விக்கெட்டும், ராஸ்டன் சேஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags:    

Similar News