தொழில்நுட்பச் செய்திகள்
டிம் குக்

தமிழகத்தை சேர்ந்த 40 பள்ளி மாணவர்களை பாராட்டிய ஆப்பிள் சி.இ.ஓ- ஏன் தெரியுமா?

Published On 2022-03-28 15:59 GMT   |   Update On 2022-03-28 15:59 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ தமிழக பள்ளி மாணவர்களை பாராட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான புகைப்படங்களை ஆப்பிள் ஐபோன் 13 மினியில் எடுத்து வெளியிட்ட 40 மேல்நிலைப்பள்ளி மாணவர்களை ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ பாராட்டியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் ஏப்ரல் 17-ம் தேதி வரை எக்மோர் அருங்காட்சியகத்தில் நடைபெறும் சென்னை போட்டோ பினாலே நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வி.ஆர் மாலில் உள்ள ஆப்ட்ரானிஸ் ஸ்டோரிலும் இந்த புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த புகைப்பட போட்டியில் 12 வயது மாணவர்களும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்பட கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், தமிழ்நாடு முடிவே இல்லாத கதைகளை கொண்டுள்ளது. அங்கே பலதரப்பட்ட உணவு, கட்டிடக்கலை, நிலப்பரப்பு, கலச்சாரங்கள் நிறைந்துள்ளன. தமிழகத்தை புகைப்படங்கள் மூலம் கண்டறிவது புதிவித அனுபவத்தை தரும் என தெரிவித்துள்ளனர்.


Tags:    

Similar News