செய்திகள்
கோப்புப்படம்

தபால் சேவை மூலம் மருந்துகள் அனுப்பலாம்

Published On 2021-06-16 06:47 GMT   |   Update On 2021-06-16 06:47 GMT
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு முககவசம், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர்:

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது முடக்கத்திலும் தபால் சேவை தொடர்ந்து இயங்கி வருவதால் அதனை பயன்படுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் தலைமை தபால் மற்றும் துணை, கிளை தபால் நிலையங்களில் இருந்து தினமும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு முககவசம், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

தினமும் 200 தபால்கள் வரையில் புக்கிங் ஆகின்றன. குறிப்பாக திருப்பூர் ரெயில்வே ஆர்.எம்.எஸ்., தபால் நிலையத்தில் மருந்துப்பொருட்கள் அடங்கிய பார்சல்கள் குவிந்து வருகின்றன. எனவே பொதுமக்கள் தங்கு தடையின்றி தபால் சேவையை பயன்படுத்த முன்வர வேண்டும் என திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஜெயகீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News