செய்திகள்
தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டபோது எடுத்த படம்.

விழுப்புரம் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 5,392 பேர் எழுதினர்

Published On 2021-01-04 10:03 GMT   |   Update On 2021-01-04 10:03 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 5,392 பேர் எழுதினர். இதில் பாதிபேர் தேர்வு எழுத வரவில்லை.
விழுப்புரம்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் 69 துணை ஆட்சியர் நிலையிலான பணியிடங்களை நிரப்பிடும் வகையில் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து கொேரானாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் இத்தேர்வு நடைபெறாமல் இருந்து. இந்த நிலையில் இத்தேர்வு 3-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் நேற்று இத்தேர்வு நடைபெற்றது.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில்குரூப்-1 தேர்வை எழுதுவதற்காக 10,738 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 39 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 5,392 பேர் மட்டுமே பங்கேற்று எழுதினார்கள். 5 ஆயிரத்து 346 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருக்கும் வகையில் துணை ஆட்சியர் நிலையில் 3 பறக்கும் படைகள் மற்றும் தாசில்தார் நிலையில் 7 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன.

விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டார். அப்போது தேர்வாளர்களின் நுழைவுச் சீட்டை வாங்கி பார்வையிட்ட அவர், அறைகளில் மின் வசதி, குடிநீர் வசதி ஆகியவை செய்யப்பட்டு உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்தார். முன்னதாகதேர்வு எழுத வந்த அனைவரும் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் வகையில் முககவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியை கடைபிடித்தும் இருந்தனர்.

Tags:    

Similar News