செய்திகள்
கொரோனா வைரஸ்

நெல்லையில் டாக்டர்கள் உள்பட 14 பேருக்கு கொரோனா

Published On 2021-01-19 10:28 GMT   |   Update On 2021-01-19 10:28 GMT
நெல்லையில் 2 டாக்டர்கள் உள்பட 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தூத்துக்குடி, தென்காசியில் 11 பேர் பாதிக்கப்பட்டனர்.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் நேற்று 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் நெல்லை மாநகர் பகுதி, பாளையங்கோட்டை யூனியன், அம்பை, நாங்குநேரி, மானூர், வள்ளியூர், களக்காடு உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்தவர்கள். இதில் நாங்குநேரி பகுதியில் தொற்று கண்டறியப்பட்ட 2 பேர் தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லை மாவட்டத்தில் கொரோனோ தொற்று பாதிப்பு எண்ணிக்கை 15,489 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 10 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 15,175 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 102 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 212 பேர் உயிரிழந்துள்ளனர்

தென்காசி மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,352 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 2 பேர் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 8,159 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 35 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 158 பேர் உயிரிழந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது. இதில் 16 ஆயிரத்து 21 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டம் முழுவதும் 48 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 141 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.
Tags:    

Similar News