வழிபாடு
வேதாரண்யேஸ்வரர்

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா: கேடயத்தில் அம்மன் வீதி உலா

Published On 2022-02-22 08:37 GMT   |   Update On 2022-02-22 08:37 GMT
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட கேடயத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்த தலம். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் மாசிமக பெருவிழா கடந்த 29-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையொட்டி அதன் ஒரு பகுதியாக மீனாட்சி அம்மன் வீதி உலா நடந்தது. முன்னதாக மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட கேடயத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News