செய்திகள்
திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் பங்கேற்றவர்களை படத்தில

திருப்பூரில் பக்ரீத் சிறப்பு தொழுகை

Published On 2021-07-21 11:35 GMT   |   Update On 2021-07-21 11:35 GMT
இந்தாண்டு கொரோனா தொற்று குறைந்துள்ளதால் பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகை நடத்தினோம். இது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொரோனா பரவல் குறைந்து வழிபாட்டுதலங்கள் திறக்க அனுமதிக்கபட்டதால் இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களுக்கு சென்று  சிறப்பு தொழுகை நடத்தினர்.

திருப்பூர் நொய்யல் வீதி, மாநகராட்சி அருகே உள்ள பள்ளிவாசல், ஜெய்வாபாய் பள்ளி அருகே உள்ள மைதானம், காங்கயம் ரோடு மற்றும் பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். பின்னர் உறவினர்கள், அருகில் வசிப்பவர்கள், ஏழை, எளியவர்களுக்கு குர்பானி  வழங்கினர். இது குறித்து இஸ்லாமியர்கள் கூறுகையில்,கொரோனா தொற்றால் கடந்த ஆண்டு ரம்ஜான், பக்ரீத் தொழுகையை வீட்டிலேயே நடத்தினோம்.

இந்தாண்டு தொற்று குறைந்துள்ளதால் பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகை நடத்தினோம். இது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏழைகளுக்கு எண்ணற்ற உதவிகளை செய்தோம் என்றனர்.

Tags:    

Similar News