செய்திகள்
விராட் கோலி - அஸ்வின்

2-வது நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 39 ரன்னில் 3 விக்கெட் இழப்பு

Published On 2019-10-03 11:57 GMT   |   Update On 2019-10-03 12:13 GMT
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் எடுத்துள்ளது.
விசாகப்பட்டினம்:

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது.

‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மா, மயங்க் அகர்வாலின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக எல்கர், மார்க் கிராம் களமிறங்கினர். மார்க்கிராம் 5 எடுத்திருந்த போது அஸ்வின் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த டி ப்ரூயின் 4 ரன்னிலும் டேனி 0 ரன்னிலும் வெளியேறினர்.

நிதானமாக விளையாடி எல்கர் 27 ரன்னிலும் பவுமா 2 ரன்னிலும் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணி தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டும் ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Tags:    

Similar News