உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

ஆயத்த ஆடை உற்பத்தி பயிற்சி

Published On 2022-01-29 05:16 GMT   |   Update On 2022-01-29 05:16 GMT
வரும் பிப்ரவரி மாதம் முதல் மெர்ச்சன்டைசிங் வகுப்பு துவங்க உள்ளது. மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
திருப்பூர்:

திருப்பூர் - அவிநாசி சாலை கைகாட்டிபுதூரில் ஏ.இ.பி.சி.,ன், ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம் (ஏ.டி.டி.சி.,) இயங்குகிறது. இம்மையத்தில் மெர்ச்சன்டைசர், தொழிற்சாலை பொறியியல் (இன்டஸ்ட்ரியல் என்ஜினியரிங்), தையல் எந்திரம் மெக்கானிக், உற்பத்தி மேற்பார்வையாளர் உள்ளிட்ட ஆயத்த ஆடை உற்பத்தி துறை சார்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி முடிப்போருக்கு சான்றிதழ் மற்றும் திருப்பூர், சென்னை, பெங்களூரு ஆடை உற்பத்தி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது. வரும் பிப்ரவரி மாதம் முதல் மெர்ச்சன்டைசிங் வகுப்பு துவங்க உள்ளது. மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இப்பயிற்சியில் சேர டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 6 மாதங்கள் வகுப்பு நடைபெறும். பஞ்சிலிருந்து நூல், துணி, ஆடை தயாரிப்பது, சாயமேற்றுதல், பிரின்டிங் தொழில்நுட்பம், ஆடைகளுக்கு விலை நிர்ணயம் செய்தல், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது என ஆடை உற்பத்தி சார்ந்த அனைத்து அம்சங்கள் குறித்தும் கற்பிக்கப்படும்.

வேலைவாய்ப்புக்காக மட்டுமின்றி புதிய தொழில்முனைவோரும் இப்பயிற்சியில் இணைந்து ஆடை தயாரிப்பு சார்ந்த நுட்பங்களை கற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, ஏ.டி.டி.சி., மையத்தை 94864 75124 தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News