செய்திகள்
கோப்பு படம்.

ஒடிசாவில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து

Published On 2020-11-20 18:23 GMT   |   Update On 2020-11-20 18:23 GMT
ஒடிசாவில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
புவனேஷ்வர்:

ஒடிசா மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பத்மநாபா பெஹ்ரா கூறுகையில், “

ஒடிசாவில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். ஒடிசாவில் நடக்கும் விபத்துகளில் பெரும்பாலான உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் ஏற்படுகிறது. இதைத் தடுக்க கடுமையான விதிமுறைகளை உருவாக்கியுள்ளோம்” என்றார்.

ஒடிசாவில் கடந்த 2019- அம் ஆண்டு நடைபெற்ற 11,064 சாலை விபத்துக்களில் 4 ஆயிரத்து 688 விபத்துகள் இருசக்கர வாகன விபத்துகள் ஆகும். அம்மாநிலத்தில் கடந்த ஆண்டு விபத்துகளினால் ஏற்பட்ட உயிரிழப்பு 5 ஆயிரத்து 333 ஆக இருந்தது. அதில், 2 ஆயிரத்து 398- பேர் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆவர். இவர்களில் 2,156- பேர் விபத்தின் போது தலைக்கவசம் அணியாமல் இருந்துள்ளனர் என்றார்.
Tags:    

Similar News