லைஃப்ஸ்டைல்
குழந்தைகள் விரும்பிய படிப்பை படிக்கட்டும்

குழந்தைகள் விரும்பிய படிப்பை படிக்கட்டும்

Published On 2021-07-21 03:27 GMT   |   Update On 2021-07-21 10:34 GMT
90 சதவிகித குழந்தைகள் பெற்றோரின் விருப்ப பாடங்களையே, படிக்கிறார்கள். ஒருசில பெற்றோர் தங்களது நிறைவேறாத கல்வி ஆசைகளை எல்லாம் குழந்தைகள் மீது திணிப்பது உண்டு.
இக்காலத்து குழந்தைகள் ரொம்பவும் ஸ்மார்ட். 10 வயதிற்குள்ளாகவே ஏதாவது ஒருதுறையில் சாதித்துவிடுகிறார்கள். குறிப்பாக கணினி, மென்பொருள் துறையில் அவர்களது ஈடுபாடு நம்பமுடியாத அளவில் இருக்கிறது. கணினி மொழிகளை வெகு சுலபமாக புரிந்து கொள்கிறார்கள். அனுபவசாலிகளை விடவும், வித்தியாசமாக சிந்திக்கிறார்கள்.

ஒவ்வொரு வயதிலும், குழந்தைகள் குறிப்பிட்ட திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, 5-ம் வகுப்பு மாணவனுக்கு நேர மேலாண்மை, பக்குவமாய் பேசுதல், ஒழுக்கமாக உணவு சாப்பிடும் பழக்கம், விவாத கருத்தை உள்வாங்கும் திறன், முறையான பேச்சுபயிற்சி போன்ற திறன்களும், நல்ல பழக்கங்களும் இருக்க வேண்டும். அதுவே மேல்நிலைப் பள்ளி மாணவன் என்றால் மொழி அறிவு, தலைமை பண்பு, வழிநடத்தும் திறன், பிறரது கருத்துகளுக்கு செவிக்கொடுத்தல்... இப்படிப்பட்ட திறன்களை பெற்றிருக்கவேண்டும்.

90 சதவிகித குழந்தைகள் பெற்றோரின் விருப்ப பாடங்களையே, படிக்கிறார்கள். குழந்தைகளின் வாழக்கையே, அவர்கள் படிக்கும் படிப்பில்தான் இருக்கிறது. அதனால் அவர்கள் விரும்பிய படிப்பை படிக்கட்டும். ஒருசில பெற்றோர் தங்களது நிறைவேறாத கல்வி ஆசைகளை எல்லாம் குழந்தைகள் மீது திணிப்பது உண்டு. அதை மட்டும் செய்துவிடாதீர்கள். அவர்களை அவர்களாகவே படிக்கவிடுங்கள். வளரவிடுங்கள்.
Tags:    

Similar News