செய்திகள்
திலீப் கோஷ்

மேற்குவங்காளம் பயங்கரவாதிகளில் கூடாரமாகவும், காஷ்மீரை விட மோசமாகிவிட்டது - பாஜக தலைவர் பேச்சு

Published On 2020-11-15 10:57 GMT   |   Update On 2020-11-15 10:57 GMT
மேற்குவங்காளத்தில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு வளர்ச்சியடைந்து வருவதாக பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபை தேர்தல் 2021-ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ளபோதும் அரசியல் கட்சியினர் தற்போது முதலே பிரசார கூட்டங்களை நடத்தத்தொடங்கியுள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட உள்ளது.

இந்த முறை மேற்குவங்காளத்தை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக தற்போதே தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் ஈடுபடத்தொடங்கிவிட்டது. 

பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா, அமித்ஷா உள்ளிட்டோர் மேற்குவங்காளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல், அம்மாநில பாஜக தலைவரான திலீப் கோஷும் தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு கட்சியின் பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், அம்மாநிலத்தில் பாஜக சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய பாஜக தலைவர் கோஷ் மேற்குவங்காள
மாநிலம் பயங்கரவாதிகளின் கூடாரமாக உள்ளது என கூறி ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

நிகழ்ச்சியின்போது பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியதாவது:- 

சமீபத்தில் கோட்ச் பிகர் மாவட்டத்தில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேற்குவங்காளத்தில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தொடர்புகள் வளர்ச்சியடைந்து வருகிறது. மாநிலம் பயங்கரவாதிகளில் கூடாரமாக மாறிவருகிறது. மேலும், தற்போதைய நிலைமை காஷ்மீரை விட மோசமாகிவிட்டது.

என்றார்.
Tags:    

Similar News