செய்திகள்
தினேஷ் குண்டுராவ்

தமிழகத்தில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளை காங்கிரஸ் கேட்குமா?- தினேஷ் குண்டுராவ் பதில்

Published On 2020-11-24 01:55 GMT   |   Update On 2020-11-24 01:55 GMT
தமிழகத்தில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளை காங்கிரஸ் கேட்குமா? என்ற கேள்விக்கு மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் பதிலளித்தார்.
கோவை:

தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நேற்று காலை மருதமலை முருகனை தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவையில் விவசாயிகள் மாநாடு வெற்றிகரமாக நடந்தது. விவசாய பாதுகாப்பு மாநாட்டுக்கு அனுமதி கிடைத்தது. ஆனால் ஏர் கலப்பை பேரணிக்கு அனுமதி கிடைக்கவில்லை. தமிழக அரசு விதிமுறைகளை பின்பற்றுவதில் பாரபட்சம் காட்டுகிறது. எதிர்க்கட்சிகள் நடத்தும் பேரணி, பொது கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கிறது.

கருத்துகள் கூறுவதில் தவறில்லை. அதே நேரத்தில், கட்சி கட்டுப்பாடுகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும். பேரறிவாளன் விடுதலை குறித்து கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். சட்டம், கோர்ட்டு என்ன சொல்கிறதோ அதை நாங்கள் ஏற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்து கூறும்போது, தொகுதி பங்கீடு குறித்து இப்போது எதுவும் கூற இயலாது. கடந்த தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட தொகுதிகளில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுமா? என்பது குறித்தும் இப்போது கருத்து கூற முடியாது. தி.மு.க.-காங்கிரஸ் ஒருவரை ஒருவர் நம்புகிறோம். ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்கிறோம் என்றார்.

பேட்டியின்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், மாநில பொதுச்செயலாளர் செல்வம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News