ஆன்மிகம்
பரமேஸ்வரி காளிகாம்பாள்

பரமேஸ்வரி காளிகாம்பாள்

Published On 2020-08-26 08:46 GMT   |   Update On 2020-08-26 08:46 GMT
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றது. இந்தக் கோவிலின் அருகிலேயே அமைந்துள்ளது, மிகவும் பழமை வாய்ந்த ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில். கருவறையில் நான்கு கரங்களுடன் மூலவராக பரமேஸ்வரி அன்னை வீற்றிருக்கிறாள்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றது. இந்தக் கோவிலின் அருகிலேயே அமைந்துள்ளது, மிகவும் பழமை வாய்ந்த ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில். கருவறையில் நான்கு கரங்களுடன் மூலவராக பரமேஸ்வரி அன்னை வீற்றிருக்கிறாள். அவள் வீற்றிருக்கும் பத்ம பீடத்தை விஸ்வகர்மாவும், அவரது இரு மகன்களும் தாங்கியிருக்கின்றனர். வலது மேல் கரத்தில் பாசமும், இடது மேல்கரத்தில் அங்குசமும், வலது கீழ்கரத்தில் அபயஹஸ்த முத்திரையும், இடது கீழ்கரத்தில் அன்னபாத்திரமும் தாங்கியபடி அன்னையானவள் அருள்பாலிக்கிறாள். சரஸ்வதி, லட்சுமியுடன் நின்ற கோலத்தில் உற்சவராகவும் அன்னை அருள்காட்சி தருகிறாள்.

ஆலய மண்டபத்தில் இருகரங்களுடன் அன்னபூரணியாகவும், பிரகாரத்தில் மேற்குப்புறத்தில் பன்னிருகரங்களுடன், காலில் மகிஷனை மிதித்தபடி மகிஷாசுரமர்த்தினியாகவும் அன்னை காணப்படுகிறாள். வடக்கு புறத்தில் ஆதிகாளிகாம்பாள் சன்னிதி காணப்படுகிறது. இங்கு அன்னையானவள், விரிந்த சடையும், அங்குசம், பாசம், கபாலம், அபய முத்திரையுடன் நான்கு கரங்களுடனும் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள்.

இங்கு சக்தி லிங்கம் ஒன்று உள்ளது. இதில் சக்தியும், சிவனும் ஒன்றாக இணைந்தது போன்று காட்சி தருவது அபூர்வமான அமைப்பாகும். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில், மகிஷாசுரமர்த்தினியையும், ஆதி காளிகாம்பாளையும் வழிபாடு செய்து வந்தால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.
Tags:    

Similar News