உலகம்
இலங்கை-இந்தியா

இலங்கை அரசுக்கு ரூ.3,730 கோடி கடனுதவி வழங்க இந்தியா முடிவு

Published On 2022-01-18 13:04 GMT   |   Update On 2022-01-18 13:04 GMT
பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதற்காக இலங்கை அரசுக்கு இந்தியா கடனுதவி வழங்கவுள்ளது.
புதுடெல்லி:

இலங்கைக்கு ரூ.3,730 கோடி கடனுதவி வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

இலங்கையில் அந்நிய செலாவணிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சரக்குகளுக்கு வழங்க போதிய அளவு டாலா்கள் கையிருப்பில் இல்லாமல் அத்தியாவசிய பொருள்களுக்கு கூட அந்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவிடமிருந்து சுமாா் 7,391 கோடி ரூபாய் கடனாக பெறுவதற்கு இலங்கை அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக அந்நாட்டு மத்திய வங்கி ஆளுநா் அஜித் நிவாா்ட் கப்ரால் கடந்த வாரம் புதன்கிழமை அறிவித்தார். 

இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை நிதியமைச்சர் பஷில் ராஜபக்சே இடையே பேச்சுவார்த்தைக்கு பிறகு,  பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதற்காக இலங்கை அரசுக்கு இந்தியா ரூ.3,730 கோடி கடனுதவி அளிக்க முடிவு செய்துள்ளது. 

ஏற்கெனவே இந்த மாத தொடக்கத்தில் ரூ.90 கோடி டாலர் அந்நிய செலாவணியையும் இந்தியா ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.   
Tags:    

Similar News