ஆன்மிகம்
கருந்தேவம்பாளையத்தில் காமன் பண்டிகை விழா

கருந்தேவம்பாளையத்தில் காமன் பண்டிகை விழா

Published On 2021-03-31 06:53 GMT   |   Update On 2021-03-31 06:53 GMT
கருந்தேவம்பாளையத்தில் காமன் பண்டிகை விழாவில் ஈஸ்வரர் வேடமணிந்தவரிடம் குழந்தை வரம் வேண்டியும், நினைத்த காரியம் நடைபெற வேண்டியும் ஏராளமான பெண்கள் மடிப்பிச்சை ஏந்தி வழிபாடு செய்தனர்.
கந்தம்பாளையம் அருகே கருந்தேவம்பாளையத்தில் உள்ள விநாயகர் கோவில் பகுதியில் காமன் பண்டிகை விழா கடந்த 27-ந் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து காம தகனம், பொங்கல வைத்தல், மாவிளக்கு எடுத்தல், சித்தாண்டி வேடம், மதுரை வீரன், பொம்மியம்மாள் நாடகம், காமனை எழுப்புதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.

நேற்று அதிகாலை பட்டாபிஷேகம் நடைபெற்று ஈஸ்வரர் வேடமணிந்தவரிடம் குழந்தை வரம் வேண்டியும், நினைத்த காரியம் நடைபெற வேண்டியும் ஏராளமான பெண்கள் மடிப்பிச்சை ஏந்தி வழிபாடு செய்தனர். இதையடுத்து மன்மத சாமி கோவில் மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மன்மத சாமியை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News