செய்திகள்
காப்புக்காட்டில் விடப்பட்ட பெண் யானை

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட பெண் யானை காப்புக்காட்டில் விடப்பட்டது

Published On 2020-11-21 02:19 GMT   |   Update On 2020-11-21 02:19 GMT
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட பெண் யானை காப்புக்காட்டில் விடப்பட்டது
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே ஏழு குண்டூர் கிராமத்தில் ஒரு தோட்டத்தில் உள்ள 50 அடி ஆழ கிணற்றில் நேற்று முன்தினம் ஒரு பெண் யானை தவறி விழுந்தது. 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நேற்று முன்தினம் இரவு கிணற்றில் இருந்து யானை உயிருடன் மீட்கப்பட்டது. இந்த யானையை தர்மபுரி மாவட்ட கலெக்டர் கார்த்திகா மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். அந்த பெண் யானைக்கு குறிப்பிடத்தக்க பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. சிறிது நேரம் சோர்வாக இருந்த யானையின் உடல்நிலை சீரான பின்னர் உணவு தின்றது. தண்ணீரையும் குடித்தது. அந்த யானையை மாரண்டஅள்ளி பகுதியிலுள்ள காப்புக்காட்டில் பாதுகாப்பாக விட வனத்துறை குழுவினருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து யானையை லாரியில் ஏற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதற்கு யானை ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதையடுத்து வனத்துறை குழுவினர் அந்த யானையை அடர்ந்த காட்டு பகுதியை நோக்கி மெதுவாக விரட்டினார்கள். நேற்று அதிகாலையில் அந்த யானை மாரண்டஅள்ளி காப்புக் காட்டுக்குள் சென்றது. நேற்று பகலில் மாரண்டஅள்ளி காப்புக்காடு பகுதியில் அந்த யானை தனியாக நடமாடியது. வனத்துறையை சேர்ந்த 10 பேர் கொண்ட வனக்குழுவினர் காப்புக்காடு பகுதியில் முகாமிட்டு யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News