செய்திகள்
திருமூர்த்தி அணை

திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

Published On 2020-01-14 10:18 GMT   |   Update On 2020-01-14 10:18 GMT
திருமூர்த்தி அணையிலிருந்து முதல்மண்டல பாசன பகுதிகளுக்கு வருகிற 27-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்படவுள்ளது.
பொள்ளாச்சி:

பிஏபி திட்டத்தில் திருமூர்த்தி அணையிலிருந்து 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன. நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மண்டலத்திலும் சுமார் 96 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். தற்போது நான்காம் மண்டலத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இன்று நான்காம் மண்டலத்திற்கு வழங்கப்படும் தண்ணீர் நிறுத்தப்படுகிறது.

இந்நிலையில், முதல் மண்டலத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி சமீபத்தில் நடைபெற்ற விவசாயிகள் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. கோரிக்கையை அடுத்து வரும் 27-ந்தேதி திருமூர்த்தி அணையில் இருந்து முதல் மண்டலத்திற்கு நான்கு சுற்றுக்களுக்கு சுமார் 20 நாட்கள் வரை 7.6 டிஎம்சி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இந்த தகவலை பிஏபி திட்டக்குழுத்தலைவர் மெடிக்கல் பரமசிவம் தெரிவித்தார்.


Tags:    

Similar News