செய்திகள்
கைது செய்யப்பட்ட பெண்களை படத்தில் காணலாம்.

வாலிபரிடம் நகை - பணத்தை ஏமாற்றிய 5 பெண்கள் சிறையில் அடைப்பு

Published On 2021-10-20 07:52 GMT   |   Update On 2021-10-20 07:52 GMT
ரீஷாவுக்கு ஏற்கனவே ஜெய் ஸ்ரீதர் என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் அடுத்துள்ள குன்னத்தூர் குறிஞ்சி ஊராட்சி நல்லிக்கவுண்டம் பாளையம் செட்டிதோட்டம் பகுதியை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் (வயது34). இவருக்கு பெற்றோர் கடந்த ஆறு ஆண்டாக பெண் பார்த்து வந்தனர். பெண் அமையவில்லை. 

இதனால் ஈரோடு மாவட்டம் சிறுவலூரை சேர்ந்த சந்திரன் என்பவரிடம் பெண் பார்க்க சொல்லி உள்ளனர். அவர் திருப்பூர் நெருப்பெரிச்சல் தோட்டத்து பாளையம் பகுதியில் உள்ள அம்பிகா என்ற பெண் புரோக்கரிடம் ராஜேந்திரனை அறிமுகம் செய்து வைத்தார். 

அதற்கு அம்பிகா பெண் பார்த்து தருவதாகவும் புரோக்கர் கமிஷன் ரூ.1லட்சத்து 30 ஆயிரம் தர வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு ராஜேந்திரனும் சம்மதித்தார். உடனே ரீஷா என்ற பெண் இருப்பதாக அம்பிகா கூறி ராஜேந்திரனும் பார்த்து பெண் பிடித்துவிட்டதால் திருமணம் செய்ய முடிவு செய்தனர். 

பெண்ணுக்கு தாலி, அரைப்பவுன் கம்மல், கொலுசு, 10 ஆயிரம் ரூபாய் க்கு பட்டுப் புடவை ஆகியவை எடுத்து கொடுத்துள்ளார். கடந்த மாதம் 24ம் தேதி இரு குடும்பத்தினருடன் பச்சாம் பாளையம் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவிலில் வைத்து திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்ததும் புரோக்கர் கமிஷனாக 1.30 லட்சம் ரூபாயை அம்பிகா பெற்றுக் கொண்டார். 

இந்த நிலையில் 25ம் தேதி ராஜேந்திரன் வெளியில் சென்றிருந்தபோது ரீஷா நகை மற்றும் பணத்துடன் தலைமறைவானார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் புரோக்கர் அம்பிகாவை தொடர்பு கொண்டபோது உரிய பதில் இல்லை. 

இதனால் சந்தேகமடைந்த ராஜேந்திரன் அரியலூர் சென்று விசாரித்தார். அதில் ரீஷாவுக்கு ஏற்கனவே ஜெய்ஸ்ரீதர் என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது தெரிந்தது.

அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் ரீஷா(27), புரோக்கர் அம்பிகா(38), அவரின் உறவினர்கள் வள்ளி(55), தேவி(55), தங்கம்(32) ஆகியோர் மீது குன்னத்தூர் போலீசில் புகார் செய்தார். 

போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐந்து பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த 5 பேரையும் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News