செய்திகள்
காலி குடங்களுடன் திரண்ட கிராம மக்கள்.

தேன்கனிக்கோட்டை அருகே குடிநீர் - சாலை வசதி கேட்டு மலைவாழ் மக்கள் குமுறல்

Published On 2019-09-20 14:26 GMT   |   Update On 2019-09-20 14:26 GMT
தேன்கனிக்கோட்டை அருகே குடிநீர் மற்றும் சாலை வசதி கேட்டு மலைவாழ் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிலாளம் ஒட்டியுள்ளது காலிகட்டம் மலை கிராமம். இந்த கிராமத்திற்கு சேறுகலந்த தண்ணீர் வழங்கப்படுவதாகவும், அதுவும் ஒரு நாளைக்கு ஒரு குடம் மட்டும் கிடைப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். சுகாதாரமற்ற இத்தகைய தண்ணீரால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். மேலும், இந்த மலை கிராமத்திற்கு தார்சாலை வசதி இன்றி உள்ளது. இதனால் பொதுமக்கள் குண்டும், குழியுமாக உள்ள மண்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். 

இதனை நிர்வாகத்தில் பலமுறை சொல்லியும் கண்டு கொள்ளவில்லை என கிராமமக்கள் கூறுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தண்ணீர் மற்றும் தார் சாலையை நிறைவேற்றி தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News