செய்திகள்
மயங்க் அகர்வால், ஷுப்மான் கில்

மயங்க் அகர்வால், ஷுப்மான் கில் சதம்: இந்தியா ‘சி’ 366 ரன்கள் குவிப்பு, இந்தியா ‘ஏ’ 134 ரன்னில் சுருண்டது

Published On 2019-11-01 13:11 GMT   |   Update On 2019-11-01 13:11 GMT
தியோதர் டிராபியில் இளம் வீரர்களான மயங்க் அகர்வால் மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர் சதம் அடிக்க இந்தியா ‘சி’ 232 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, இந்தியா ‘சி’ அணிகளுக்கு இடையில் தியோதர் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ - இந்தியா ‘சி’ அணிகள் மோதின.

இந்தியா ‘சி’ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. மயங்க் அகர்வால், ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 38.3 ஓவர்களில் 226 ரன்களாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது.

மயங்க் அகர்வால் 120 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய ஷுப்மான் கில் 142 பந்தில் 10 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 143 ரன்கள் விளாசினார். சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 29 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 72 ரன்கள் அடிக்க இந்தியா ‘சி’ 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 366 ரன்கள் குவித்தது.

பின்னர் 367 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி பேட்டிங் செய்தது. சக்சேனாவின் அபாரமான பந்து வீச்சில் இந்தியா ‘ஏ’ 29.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 134 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா பி  232 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  சக்சேனா 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
Tags:    

Similar News