ஆன்மிகம்
ருத்ர மகா யாகம்

தேப்பெருமாநல்லூர் விஸ்வநாதர் கோவிலில் ஏகாதச ருத்ர மகா யாகம்

Published On 2021-11-23 05:04 GMT   |   Update On 2021-11-23 05:04 GMT
தேப்பெருமாநல்லூர் வேதாந்தநாயகி விஸ்வநாதர் கோவிலில் கார்த்திகை சோம வார 108 சங்காபிஷேக வழிபாட்டை முன்னிட்டு விஸ்வநாத சாமிக்கு ஏகாதச ருத்ர மகாயாகம் தொடங்கியது.
கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூரில் வேதாந்தநாயகி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை சோம வார 108 சங்காபிஷேக வழிபாட்டை முன்னிட்டு விஸ்வநாத சாமிக்கு ஏகாதச ருத்ர மகாயாகம் தொடங்கியது.

நேற்று 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று கடங்கள் புறப்பட்டது. ஆலய அர்ச்சகர் சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் 30க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு ருத்ர மகா யாக பூஜைகளை செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு பஞ்சகவியம், பஞ்சாமிர்தம், பால், தயிர், நெய், தேன், கருப்பஞ்சாறு, பழச்சாறு, இளநீர், சந்தனம் ஆகிய 11 வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் 108 சங்காபிஷேகமும் மஹா தீபாராதனையும் நடைபெற்றது. சிறப்பு ருத்ர மகா யாக ஏற்பாடுகளை ேகாவில் உதவி ஆணையர் சி. நித்யா மற்றும் ஆலய பணியாளர்கள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News