தொழில்நுட்பம்
கேலக்ஸி ஏ21எஸ்

இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, 48 எம்பி குவாட் கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2020-05-16 04:22 GMT   |   Update On 2020-05-16 04:22 GMT
இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, 48 எம்பி குவாட் கேமரா கொண்ட சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
 


சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனினை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, ஆக்டா கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ 2.0 வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி குவாட் கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும்  5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது.  



சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் சிறப்பம்சங்கள்

- 6.5 இன்ச் 720x1600 பிக்சல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் பிராசஸர்
- 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
- 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
- மெமரியை நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ 2.0
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/2.0
- 8 எம்பி f/2.2 அல்ட்ரா வைடு கேமரா
- 2 எம்பி f/2.4 டெப்த் கேமரா
- 2 எம்பி f/2.4 மேக்ரோ கேமரா
- 13 எம்பி f/2.2 செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
-15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் பிளாக், வைட், புளூ மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News