ஆன்மிகம்
இலஞ்சி குமாரர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவில் கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்ட போது எடுத்த படம்.

இலஞ்சிகுமாரர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றம்

Published On 2020-11-16 07:01 GMT   |   Update On 2020-11-16 07:01 GMT
இலஞ்சி குமாரர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா வருகிற 22-ந் தேதி வரை நடக்கிறது. 20-ந் தேதி மாலை சூரசம்ஹார நிகழ்ச்சியும், மறுநாள் குமாரர் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
தென்காசி அருகே உள்ள இலஞ்சி குமாரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா நேற்று காலை தொடங்கியது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி சுசிலா ராணி, தக்கார் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவிழா வருகிற 22-ந் தேதி வரை நடக்கிறது. 20-ந் தேதி மாலை சூரசம்ஹார நிகழ்ச்சியும், மறுநாள் குமாரர் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அனைத்து நிகழ்ச்சிகளும் கோவிலின் உள்பிரகாரத்தில் வைத்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட கூடாரப்பாறை பாலசுப்பிரமணியர் சுவாமி கோவில் மற்றும் கூடலூர் பாலசுப்பிரமணியர் சுவாமி கோவில்களில் நேற்று கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டுதல் நடந்தது. மூலவர் பாலசுப்பிரமணியர் சுவாமி மற்றும் உற்சவர் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடத்தப்பட்டது. பின்னர் கோவில் உள்பிரகாரத்தில் உற்சவர் வீதிஉலா நடந்தது. நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற உள்ளது.

கொடியேற்றம் நிகழ்ச்சியில் சிவகிரி ஜமீன்தார் ராணி பாலகுமாரி நாச்சியார், ராஜா சேவுகப்பாண்டியன் என்ற விக்னேஷ்வர சின்னத்தம்பியார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் சிவகிரி பகுதியில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களில் கந்தசஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது.
Tags:    

Similar News