செய்திகள்
இந்தியன் கரன்சி

மெட்ரோ ரெயில் நிலையத்தில் கட்டுகட்டாய் பணத்துடன் சிக்கிய நபர்

Published On 2020-09-25 17:48 GMT   |   Update On 2020-09-25 17:48 GMT
டெல்லி மெட்ரோ நிலையம் வந்த பயணியிடம் கட்டுகட்டாய் பணம் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
கொரோனா காலத்தில் அனைத்து இடங்களிலும் சோதனைகள் கடுமையாகி விட்டன. மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் சோதனைகள் அதிகரித்துள்ளன. சில சமயம் இப்படிப்பட சோதனைகளில் ஈடுபடும் அதிகாரிகள் பல அதிர்ச்சிகளையும் ஆச்சாரியங்களையும் சந்திப்பதுண்டு. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் குறித்துதான் இங்கே பார்க்கவுள்ளோம்.

டெல்லியில் மெட்ரோ நிலையத்தில் 35 லட்சம் ரூபாய் பணத்துடன் ஒருவரை பாதுகாப்புப்படையினர் பிடித்னர். அதன் பின்னர் அதிகாரிகள் அந்த நபரை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

வியாழக்கிழமை மாலை 5:30 மணியளவில் தாகூர் கார்டன் மெட்ரோ நிலையம் அருகே நபர் பணம் நிறைந்த பையுடன் வந்தார். அந்த நபர் தனது பையை மெட்ரோ வளாகத்திற்குள் எடுத்துச் செல்ல, கேட் அருகே அமைந்துள்ள எக்ஸ்ரே இயந்திரத்தில் வைத்தார். அந்த இயந்திரத்தில், ஸ்கேனிங்கின் போது விசாரணை அதிகாரிகளுக்கு சில சந்தேகங்கள் வந்தன. அதன் பிறகு அந்த நபரின் பையில் சோதனை செய்யப்பட்டது. அதில் 500 ரூபாய் நோட்டுகளின் பல கட்டுகள் இருந்தன.

அதன் பின்னர், பாதுகாப்பு படையினர் அந்த நபரிடம் பணம் குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் எந்தவொரு கேள்விக்கும் அவரால் திருப்திகரமான பதிலைக் கொடுக்க முடியவில்லை. அஜ்மல் என்ற அந்த நபரின் பையில் சுமார் 35 லட்சம் ரூபாய் ரொக்கம் பிடிபட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் குஜராத்தின் படானைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. அவரை பாதுகாப்புப்படை வீரர்கள் வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News