செய்திகள்
ப.சிதம்பரம் - பரூக் அப்துல்லா

ப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும்: குலாம் நபி ஆசாத்

Published On 2019-11-17 11:24 GMT   |   Update On 2019-11-17 11:24 GMT
வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லா, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர அனுமதிக்க வேண்டும் என குலாம் நபி ஆசாத் வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் இந்த கூட்டத்தொடரை இடையூறின்றி சுமுகமான முறையில் நடத்துவதற்காக டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக அரங்கத்தில் அனைத்து கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தலைமையில் இன்று நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் மற்றும் அனைத்து கட்சிகளின் பாராளுமன்ற தலைவர்கள் பங்கேற்றனர்.



இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மேலிடத் தலைவர் குலாம் நபி ஆசாத், காஷ்மீரில் 3 மாதங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லா பாராளுமன்றத்துக்கு வர அனுமதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதேபோல், திகார்  சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் பாராளுமன்றத்துக்கு வர அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

வழக்கில் சிக்கிய உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு வருவதற்கு இதற்கு முன்னர் பல தருணங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இதை முன்னுதாரணமாக கொண்டு  ப.சிதம்பரம் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும் எனவும் குலாம் நபி ஆசாத் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News