உலகம்
நியூயார்க் ஐ.நா.சபை முன்பு துப்பாக்கியால் மிரட்டல் விடுத்தவர்

நியூயார்க் ஐ.நா.சபை முன்பு துப்பாக்கியால் மிரட்டல் விடுத்தவர் கைது

Published On 2021-12-03 05:03 GMT   |   Update On 2021-12-03 05:03 GMT
நியூயார்க் ஐநா சபை முன்பு தற்கொலை செய்து கொல்ல போவதாக மிரட்டல் விடுத்தவரால் 3 மணி நேரம் பரப்பரப்பும், பதட்டமும் நிலவியது.

நியூயார்க்:

நியூயார்க்கில் உள்ள ஐ.நா.சபை கட்டிடம் முன்பு சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்று திடீரென துப்பாக்கியுடன் வந்தார். அவர் பாதுகாப்பு அறை அருகே நின்றுகொண்டு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து தலைமை அலுவலகத்தின் வாசல்கள் அனைத்தும் மூடப்பட்டன. உள்ளே இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

அந்த பகுதியில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவர் எதற்காக இந்த செயலில் ஈடுபட்டார் என்பது தெரியவில்லை. இச்சம்பவத்தால் ஐ.நா. சபை அலுவலகம் முன்பு 3 மணி நேரம் பரப்பரப்பும், பதட்டமும் நிலவியது.

Tags:    

Similar News