செய்திகள்
தமிழக அரசு

தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Published On 2021-05-14 09:38 GMT   |   Update On 2021-05-14 13:15 GMT
தமிழக காவல் துறையில் காத்திருப்பு பட்டியலில் இருந்த 12 அதிகாரிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:

கூடுதல் தலைமைச்செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை முன்னாள் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக காவல் துறையில் காத்திருப்பு பட்டியலில் இருந்த 12 அதிகாரிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

காத்திருப்பு பட்டியலில் இருந்த பிரதீப் வி.பிலிப் தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி.யாக ஜெயந்த் முரளி, பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக அபேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தில் ஐ.ஜி.யாக ஜெயராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக தினகரன், ஆயுதப்படை ஐ.ஜி.யாக லோகநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.யாக ராஜேந்திரன், சேலம் குற்றப்பிரிவு துணை காவல் ஆணையராக மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு காவலர் பயிற்சி பள்ளி எஸ்.பி.யாக செந்தில், மதுரை மண்டல அமலாக்க பிரிவு எஸ்.பி.யாக மகேஷ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சட்டம்-ஒழுங்கு உதவி ஐ.ஜி.யாக அருளரசு, காவல்துறை நிர்வாக உதவி ஐஜியாக பி.சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தை-மகளிர் குற்ற தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக சுரேஷ்குமார், வணிக குற்ற தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News