ஆன்மிகம்
லிங்க பைரவி

‘ஈஷா’ லிங்க பைரவியில் நவராத்திரி திருவிழா இன்று தொடங்கி 15-ந்தேதி வரை நடக்கிறது

Published On 2021-10-07 08:33 GMT   |   Update On 2021-10-07 08:33 GMT
அக்டோபர் 9, 10, 15-ந்தேதிகளில் மாலை 5.30 மணிக்கு நடக்கும் சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை பார்வையிட https://isha.sadhguru.org/in/en/events/annual-events/navratri என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையடிவாரம் ‘ஈஷா’ மையத்தில் உள்ள லிங்க பைரவியில் நவராத்திரி திருவிழா, அக்டோபர் 7-ந்தேதி (இன்று) தொடங்கி வருகிற 15-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி அக்டோபர் 8, 9, 10, 12, 15-ந்தேதிகளில் சம்ஸ்கிருதி மாணவர்களின் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் லிங்க பைரவி யூ-டியூப் சேனலில் (https://www.youtube.com/c/LingaBhairavi) மாலை 6.45 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.

இதுதவிர அக்டோபர் 9, 10, 15-ந்தேதிகளில் மாலை 5.30 மணிக்கு நடக்கும் சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை பார்வையிட https://isha.sadhguru.org/in/en/events/annual-events/navratri என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

மேற்கண்ட தகவல் ‘ஈஷா’ அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News