செய்திகள்
சாலையில் தேங்கிய வெள்ளம்

டெல்லியில் வரலாறு காணாத மழை- வெள்ளக்காடான சாலைகள்

Published On 2021-09-01 13:33 GMT   |   Update On 2021-09-01 13:33 GMT
டெல்லியில் 4ம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியதுடன், இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்தது.
புதுடெல்லி:

டெல்லியில் பெய்து வரும் கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. டெல்லி மற்றும் புறநகர்ப்பகுதிகளில் இன்று காலை முதலே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 4ம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. 

டெல்லியில் ஒரே நாளில் 112.1 மிமீ மழை பெய்திருப்பதாகவும், இது கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவில், ஒரு நாளில் பெய்த அதிகபட்ச மழை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு 2002ல் செப்டம்பர் 13ம் தேதி 126.8 மிமீ மழை பெய்துள்ளது. 
Tags:    

Similar News