உள்ளூர் செய்திகள்
வேலூர் நிக்கல்சன் கால்வாய் தூர்வாரும் பணியை கார்த்திகேயன் எம்.எல்.ஏ, மேயர் சுஜாதா ஆகியோர் ஆய்வு செய்த காட்சி.

வேலூர் நிக்கல்சன் கால்வாய் தூர்வாரும் பணியை எம்.எல்.ஏ, மேயர் ஆய்வு

Published On 2022-04-15 10:53 GMT   |   Update On 2022-04-15 10:53 GMT
வேலூர் நிக்கல்சன் கால்வாய் தூர்வாரும் பணியை எம்.எல்.ஏ, மேயர் ஆய்வு செய்தனர்.
வேலூர்:

வேலூர் மாங்காய் மண்டி அருகே உள்ள நிக்கல்சன் கால்வாய் தூர்வாரும் பணியை வேலூர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ, மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். 

அப்போது அங்கு வந்த மாங்காய் மண்டி வியாபாரிகள் ஒரு சிலர் டெண்டர் எடுக்காமலேயே மாங்காய் மண்டிக்கு பழங்களை ஏற்றிவரும் வாகனங்களுக்கு வரி வசூல் செய்வதாகவும், மாங்காய் மண்டியில் சேரும் குப்பைகளை சேகரிக்கும் மாநகராட்சி ஊழியர்கள் மாங்காய் மண்டி அருகிலேயே மலைபோல் குவித்து விடுகின்றனர். 

இதனால் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன வரி வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். 

இதையடுத்து 31 வது வார்டு அவ்லியா ஷா தர்கா தெருவில் ஆய்வு செய்த போது அங்கிருந்த பொதுமக்கள் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்குவதாகவும், அருகில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கழிப்பிட வசதி இல்லாததால் திறந்தவெளியை பயன்படுத்துவதாகவும் தெரிவித்தனர். 

மேலும் மழைக்காலங்களில் மழை நீருடன் கழிவுநீர் சேர்ந்து வீடுகளில் புகுந்து விடுவதாகவும் மதில் சுவர் அமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற மேயர் சுஜாதா 6 மாதங்களில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.
Tags:    

Similar News