செய்திகள்
போராட்டத்தின் மீது விவசாயி மீது தாக்குதல் நடத்தும் போலீஸ் (கோப்பு படம்)

சட்டங்கள் கார்பரேட்டுகளுக்காக உருவாக்கப்படுகிறது - விவசாய சங்க தலைவர் சாடல்

Published On 2020-11-30 14:46 GMT   |   Update On 2020-11-30 14:46 GMT
அரசியலமைப்பு கார்பரேட்டுகளுக்கான ஆட்சியை கார்பரேட்டுகளுகளால் கார்பரேட்டுகளுக்காக வழங்கும் வகையில் மாறியுள்ளதாக விவசாய சங்க தலைவர் குற்றம்சுமத்தியுள்ளார்.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை 5-வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 

டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை போலீசார் களைக்க முற்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நிலையை தீவிரமடைந்ததையடுத்து, விவசாயிகள் டெல்லிக்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். மேலும், டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். 



ஆனால், டெல்லி எல்லையான சிங்கு மற்றும் டிக்ரியில் பகுதியிலேயே விவசாயிகள் தொடர்ந்து 5-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாய சங்கங்களில் ஒன்றான பாரதீய கிசான் சங்கத்தலைவர் குர்நாம் சிங் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் பேசியதாவது:-

அரசியலமைப்பு மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் மக்களாட்சிக்காக வழங்கப்பட்டது. ஆனால், அது தற்போது கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக நடத்தப்படும் கார்பரேட்டு ஆட்சியாக மாறியுள்ளது.

சட்டங்கள் கார்படேட்டுகளுக்காக உருவாக்கப்படுகிறது. மக்கள் சுரண்டப்படுகின்றனர்.

என்றார்.
Tags:    

Similar News