லைஃப்ஸ்டைல்
கருப்பு கொண்டைக்கடலை கறி

கருப்பு கொண்டைக்கடலை கறி

Published On 2020-11-26 09:40 GMT   |   Update On 2020-11-26 09:40 GMT
கருப்பு கொண்டைக்கடலை கறி என்றவுடனே அனைவருக்கும் கேரளப் புட்டும், கடலைக் கறியும் தான் ஞாபகத்தில் வரும். இது சாதம் மற்றும் டிபன் வகைகளுடன் சாப்பிட, சுவை அபாரமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:

கருப்பு கொண்டக்கடலை – 150 கி
பெரிய  வெங்காயம்  – 1
பூண்டு (நசுக்கியது) – 3 பல்
தக்காளி – 2
மிளகாய் தூள்  – 2 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

ரைத்துக் கொள்ள:

தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
கசகசா – கால் டீஸ்பூன்
முந்திரி (விரும்பினால்) – 5  

தாளிக்க:

எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
பட்டை  – 1” துண்டு
சோம்பு  – 1 டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு


செய்முறை:

கொண்டைகடலையை குறைந்தது எட்டு மணி நேரம் ஊற வைத்து, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.

வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில்  எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும். 

பிறகு வெங்காயம்,பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின்  தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். 

இத்துடன்  மசாலா பொடிகளை சேர்த்து வதக்கி, வேக வைத்த கொண்டைகடலை சேர்க்கவும். இத்துடன் 1 கப்  தண்ணீர் விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும். 

பிறகு  உப்பு மற்றும் அரைத்த மசாலா சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

சுவையான கருப்பு கொண்டைக்கடலை கறியை சூடான சாதத்தில் கலந்து சாப்பிடவும், இட்லி, தோசை, ரொட்டி போன்ற டிபன் ஐட்டங்களுடன் தொட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News