ஆன்மிகம்
விரதம் இருக்கும் பக்தர்கள் கையில் காப்பு கயிறு கட்டிக் கொண்ட போது எடுத்த படம்.

செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் 9-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது

Published On 2021-11-06 06:14 GMT   |   Update On 2021-11-06 06:14 GMT
செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. வருகிற 9-ந்தேதி நடக்கிறது.
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கந்தசஷ்டி திருவிழா காப்பு அணிவித்தல் நிகழ்ச்சியுடன் விமரிசையாக தொடங்கியது. முன்னதாக முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 9-ந் தேதி மாலை 3 மணி முதல் 5 மணி நடக்கிறது. 10-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் மாதேஸ்வரன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சூரசம்ஹார விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான திருவிழா கந்த சஷ்டியுடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.அதை தொடர்ந்து காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் விரதம் இருக்கும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் ஒருவருக்கொருவர் ஆர்வமுடன் காப்பு கயிறு கட்டிக் கொண்டனர்.

இதையடுத்து வருகிற 9-ந்தேதி மாலை 3.30 மணிக்கு கோவில் வளாகத்தில் சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் காரணமாக திருவிழாக்கள், உற்சவங்கள், சுவாமி திருவீதி உலாக்கள் போன்றவற்றில் பக்தர்கள் கலந்துகொள்ள அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. எனவே இந்த ஆண்டு சூரசம்ஹார விழாவிற்கு நடத்தப்படும் காப்பு கட்டுதல், நான்கு கால அபிஷேக ஆராதனைகள், வேல் வாங்கும் உற்சவம், சூரசம்ஹாரம், மகா அபிஷேகம், திருக்கல்யாண உற்சவம் ஆகிய அனைத்து நிகழ்ச்சிகளும் பக்தர்கள் அனுமதியின்றி வழக்கம் போல் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News