செய்திகள்
போராட்டத்தில் பங்கேற்ற எம்பிக்கள்

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பாராளுமன்ற வளாகத்தில் பேரணி நடத்திய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் -வீடியோ

Published On 2020-09-23 07:45 GMT   |   Update On 2020-09-23 07:45 GMT
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் இன்று பேரணி நடத்தினர்.
புதுடெல்லி:

வேளாண் சீர்திருத்த மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

இதனைக் கண்டித்தும், வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அவை நடவடிக்கையை புறக்கணித்தனர். அத்துடன் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று அவை நடவடிக்கையில் பங்கேற்காத எதிர்க்கட்சி எம்பிக்கள் பாராளுமன்ற வளாகத்தில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேரணியாக சென்றனர். 


காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரும், கட்சியின் மாநிலங்களவை குழு தலைவருமான குலாம் நபி ஆசாத், திரிணாமுல் காங்கிரசின் டெரிக் ஓ பிரையன், தேசியவாத காங்கிரசின் பிரபுல் பட்டேல், சமாஜ்வாடி கட்சியின் ஜெயா பச்சன் உள்ளிட்ட பலர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் முல்லான்பூரில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் மற்றும் விவசாயிகள் இணைந்து டிராக்டர் பேரணி நடத்தினர். 
Tags:    

Similar News