தொழில்நுட்பம்
ஐபேட்

இலையுதிர்காலத்தில் புது ஐபேட் மினி வெளியீடு?

Published On 2021-07-12 14:22 GMT   |   Update On 2021-07-12 14:22 GMT
அதிக மாற்றங்களுடன் புது ஐபேட் மினி மாடலை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் மற்றும் ஐமேக் சாதனங்களை அப்டேட் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இவற்றில் புது டிசைன் மட்டுமின்றி ஆப்பிள் சிலிகான் பிராசஸர்களையும் வழங்கி வருகிறது. சமீபத்தில் ஐபேட் ப்ரோ மாடலில் ஆப்பிள் எம்1 பிராசஸர் வழங்கப்பட்டது. 

அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ஐபேட் மினி மாடலின் மேம்பட்ட வெர்ஷனை இந்த ஆண்டின் இலையுதிர்காலத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. புதிய ஐபேட் மினி 6 பெரிய டிஸ்ப்ளே கொண்ட ஆப்பிள் ஐமேக் மாடலுடன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



புதிய ஐபேட் மினி முற்றிலும் புது டிசைன், மிக மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஹோம் பட்டன் நீக்கப்படலாம் என்றும் தெரிகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் மிகப்பெரும் மாற்றங்களை பெறும் சாதனமாக புதிய ஐபேட் மினி இருக்கும் என கூறப்படுகிறது. 

முன்னதாக இணையத்தில் லீக் ஆன விவரங்களின் படி புது ஐபேட் மினி 206.3mm x 137.8mm x 6.1mm அளவில் உருவாகி வருவதாக கூறப்பட்டது. மேலும் இந்த மாடல் சில்வர், பிளாக் மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News