செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்.

விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கோரி பிரதமருக்கு மனு அனுப்பும் ஆர்ப்பாட்டம்

Published On 2021-09-08 10:13 GMT   |   Update On 2021-09-08 10:13 GMT
நலிவடைந்து வரும் விவசாயத்துறையை காப்பாற்ற விவசாய விளை பொருட்கள் அனைத்திற்கும் இடுபொருள் செலவை கணக்கீட்டு லாபகரமான விலை அறிவிக்க வேண்டும்.
திருப்பூர்:

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கோரி மத்திய, மாநில அரசை வலியுறுத்தி பிரதமருக்கு மனு அனுப்புதல் மற்றும் அகிலபாரத ஆர்ப்பாட்டம் பாரதிய கிசான் சங்கம் சார்பில் நடைபெற்றது.

இதில் நலிவடைந்து வரும் விவசாயத்துறையை காப்பாற்ற விவசாய விளைபொருட்கள் அனைத்திற்கும் இடுபொருள் செலவை கணக்கீட்டு லாபகரமான விலை அறிவிக்க வேண்டும்.

மேலும் இந்த லாபகரமான விலைக்கு சட்டப்பாதுகாப்பு அளித்து அதன்படி விளைபொருட்களை லாபகரமான விலைக்கு வாங்குமாறு ஆவண செய்ய வேண்டும். பாலை லாபகரமான பொருளாக அறிவித்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும். 

அமராவதி அணையை தூர்வாரி பழைய ஆயக்கட்டு மற்றும் புது ஆயக்கட்டு வாய்க்கால்களை தூர்வார வேண்டும். விவசாயிகள் தங்கள் விளைபொருளை உணர்த்த 100 சென்ட் உளர் களம் பேரூராட்சிக்கு இரண்டும் ஊராட்சிக்கு ஒன்றும் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு பிரதமருக்கு மனுவாக அனுப்பட்டது.  
Tags:    

Similar News