ஆன்மிகம்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில்

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தங்கரத தேரோட்டம் நடத்த வேண்டும் கோரிக்கை

Published On 2021-10-25 09:00 GMT   |   Update On 2021-10-25 09:00 GMT
கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தங்கரத தேரோட்டம் நடைபெறாமல் இருந்து வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தங்கரத தேரோட்டம் நடைபெறாமல் இருந்து வருகிறது. இதனால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்தநிலையில் பழனி தண்டாயுதபாணி கோவிலில் தங்கரத புறப்பாடு நடந்தது. அதுபோல் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலிலும் தங்கரத புறப்பாடு நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தங்கரதத்தில் பவனி வரும் அர்த்தநாரீஸ்வரர் சாமிக்கு மோட்டார் தொழில் முன்னேற்ற சங்கம் சார்பில் வைர கிரீடம் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக அந்த வைர கிரீடம் சாமிக்கு அணிவிக்கப்படுவதில்லை. இதனால் காணிக்கை அளித்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே தங்கரத புறப்பாட்டின்போது வைர கிரீடத்தை சாமிக்கு அணிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News