செய்திகள்
ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி அஞ்சலி

Published On 2020-10-09 05:24 GMT   |   Update On 2020-10-09 05:24 GMT
மறைந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினர்.
புதுடெல்லி:

மறைந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானின் உடல் இன்று டெல்லியில் இருந்து அவரது சொந்த மாநிலமான பீகாருக்கு கொண்டு செல்லப்படுகிறது.

லோக் ஜன சக்தி தலைவரும் மத்திய மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் டெல்லியில் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராம்விலாஸ் பஸ்வானின் உடல், மருத்துவ நடைமுறைகளுக்கு பிறகு இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பஸ்வானின் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.



ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி நேரில் சென்று பஸ்வான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் பஸ்வான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அஞ்சலிக்கு பிறகு இன்று பிற்பகல் பஸ்வானின் உடல் விமானம் மூலம், அவரது சொந்த மாநிலமான பீகாருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

பஸ்வான் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் இன்று பாராளுமன்ற கட்டிடம் மற்றும் ஜனாதிபதி மாளிகையில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.


Tags:    

Similar News