ஆட்டோமொபைல்
ஃபெராரி ரோமா

அதிரடி அம்சங்களுடன் ஃபெராரி ரோமா அறிமுகம்

Published On 2019-11-18 14:46 GMT   |   Update On 2019-11-18 14:46 GMT
ஃபெராரி நிறுவனத்தின் புதிய ரோமா கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



ஃபெராரி நிறுவனம் முற்றிலும் புதிய ரோமா காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஃபெராரி ரோமா 2 பிளஸ் கூப் ஸ்போர்ட்ஸ் மாடலில் ஃபுல் எல்.இ.டி. அடாப்டிவ் ஹெட்லைட்கள், ஹாரிசான்டல் எல்.இ.டி. டி.ஆர்.எல்.களுடன் வருகிறது.

இத்துடன் கார் நிறத்திற்கேற்ற கிரில், மெல்லிய எல்.இ.டி. டெயில் லைட்கள், நான்கு எக்சாஸ்ட் பைப்கள், பின்புற ஸ்பாயிலர், 20-இன்ச் ஐந்து ஸ்போக்களை கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்புறம் 3-ஸ்போக் மற்றும் பல்வேறு அம்சங்களை இயக்க வழி செய்யும் ஸ்டீரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.



புதிய ஸ்டீரிங் வீல் வாடிக்கையாளர்களை சாலையில் முழு கவனத்தை செலுத்த வழி செய்யும் அளவு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டுனர் கைகளை ஸ்டீரிங் வீலில் இருந்து எடுக்க வேண்டிய நிலை ஏற்படாது.

புதிய ரோமா காரில் 3.9 லிட்டர் வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 611 பி.ஹெச்.பி. பவர், 760 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 8-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.4 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 320 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

ஃபெராரி புதிய ரோமா காரின் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதன் விலை இரண்டு லட்சம் யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 1.58 கோடி) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News