உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

35 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள்

Published On 2022-01-11 10:14 GMT   |   Update On 2022-01-11 10:14 GMT
திருச்சி மாவட்டத்தில் சம்பா நெல் கொள்முதல் செய்வதற்காக 35 இடங்களில் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.
திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் 51 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. இதன் அறுவடை காலம் நெருங்கி வருவதால் மாவட்டம் முழுவதும் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 35 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு ரூ. 2,060&ம், பருமனான நெல்லுக்கு ரூ. 2,015&ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் அதிகம் விளைச்சல் இருப்பதால் 1 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் சம்பா நெல் கொள்முதல் செய்ய வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சிற்றரசு கூறும்போது, 2022 சம்பா சீசனில் 1.30 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் முதற்கட்டமாக 30 நேரடி கொள்முதல் நிலையங்களும், கூடுதலாக திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, மருங்காபுரி வட்டாரங்களில் 5 கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட உள்ளன என்றார்.

விவசாயிகள் தரப்பில் கூறும்போது, நெல் இருப்பு வைப்பதற்கான வசதிகளை அரசு செய்து தர வேண்டும். மேலும் நெல் எடைபோடும் போது முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News