வழிபாடு
திருத்தணி முருகன் கோவிலில் மாசி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருத்தணி முருகன் கோவிலில் மாசி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-02-08 09:02 GMT   |   Update On 2022-02-08 09:02 GMT
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி பெருவிழா 10 நாட்கள் நடக்கிறது. வருகிற 15-ந்தேதி அன்று இரவு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற உள்ளது.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் புலி வாகனம், வெள்ளி மயில் வாகனம், சிங்க வாகனம், ஆட்டுக்கடா வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வள்ளி தெய்வயானை சமேதராய் முருகக்கடவுள் உற்சவ மூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

வருகிற 15-ந்தேதி அன்று இரவு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற உள்ளது.

விழாவை முன்னிட்டு தினசரி மூலவர் கடவுளுக்கு சிறப்பு அபிஷேகம் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்று வருகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி, அதிகாரிகள் செய்து வருகின்றனர். தற்போது கொரோனா கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் பக்தர்கள் அதிகளவு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News