ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் கோவில் ஐப்பசி பூரம் விழாவில் தெய்வானை வீதிஉலா வந்தார்

திருப்பரங்குன்றம் கோவிலில் ஐப்பசி பூரம் விழா: தெய்வானை வீதிஉலா வந்தார்

Published On 2019-10-25 04:25 GMT   |   Update On 2019-10-25 04:25 GMT
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஐப்பசி பூர திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி உற்சவர் சன்னதியில் தெய்வானை அம்பாளுக்கு சகல பூஜையும், சர்வ அலங்காரமும், ஆராதனையும் நடந்தது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரம் மற்றும் ஐப்பசி பூர திருவிழா தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது. ஆடி மாதம் நடைபெறும் ஆடிப்பூர திருவிழாவில் கோவர்த்தனாம்பிகையும், ஐப்பசி பூர திருவிழாவில் தெய்வானையும் எழுந்தருளி வீதிஉலா வருவார்கள். இதில் அம்பாள் மட்டும் எழுந்தருளுவது விசேஷமாகும்.

இந்தநிலையில் நேற்று கோவிலில் ஐப்பசி பூர திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி உற்சவர் சன்னதியில் தெய்வானை அம்பாளுக்கு சகல பூஜையும், சர்வ அலங்காரமும், ஆராதனையும் நடந்தது. இதனையடுத்து மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானை அம்பாள் புறப்பட்டு வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் ஆங்காங்கே திருக்கண் அமைத்து வழிபட்டனர்.
Tags:    

Similar News