உள்ளூர் செய்திகள்
வரதராஜ பெருமாள் கோவிலில் பரமபத வாசல் வழியாக சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

புதுவை பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

Published On 2022-01-13 03:38 GMT   |   Update On 2022-01-13 03:38 GMT
புதுவையில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. கோஷம் என எழுப்பினர்
புதுச்சேரி:
கொரோனா கட்டுபாடுகள்  புதுவையில் விதிக்கப்பட்டு இருந்தாலும் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு  தடை ஏதும் விதிக்கப்படவில்லை.

இதனால் புதுவையில் வழக்கமான நடவடிக்கைகளுடன்  சொர்க்கவாசல் திறப்பு விழா அனைத்து பெருமாள் கோவில்களிலும் நடைபெற்றது. நகரின் காந்தி வீதியில் உள்ள புகழ்பெற்ற வரத ராஜப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு  சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

சொர்க்கவாசல் திறந்த வுடன் முதலில் உற்சவர் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதகராக சொர்க்க வாசலில் எழுந்த ருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் கோவிந்தா... கோவிந்தா என கோஷம் எழுப்பி வழிபட்டனர்.

முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது என  கொரோனா கட்டுப்பாட்டு நிபந்தனைகளை பக்தர் கள் கண்டிப்பாக பின் பற்ற வேண்டும் என  தேவஸ்தானத்தினர் அறிவித்திருந்தனர். 

இருப்பினும் பல கோவில்களில் பக்தர்கள் முககவசம் அணிந்து வந்தாலும் சமூக இடை வெளியை  பின்பற்ற முடியவில்லை. இதற்கு பக்தர்கள் அதிக அளவில் கூடியதும் காரணமாகும்.
Tags:    

Similar News