உள்ளூர் செய்திகள்
முட்டை

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிவு

Published On 2022-04-16 10:07 GMT   |   Update On 2022-04-16 10:07 GMT
நாமக்கல் மண்டலத்தில் ஒரே நாளில் முட்டை விலை 20 காசுகள் சரிந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்:

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளில் இருந்து 20 காசுகள் குறைத்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 14-ம் தேதி முட்டை பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்பட்ட நிலையில், இன்று முட்டை பண்ணை கொள்முதல் விலை ஒரே நாளில் 20 காசுகள் குறைக்கப்பட்டு 4 ரூபாய் 30 காசுகளாக விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

முட்டை விலை சரிவு குறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறும் போது... பள்ளிகள் தொடர் விடுமுறை காரணமாக சத்துணவிற்கு முட்டை அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தொடர் விடுமுறை, பண்டிகைகள் காரணமாக தமிழகம், கேரளாவில் முட்டை விற்பனை சரிந்து அதிகளவு தேக்கமடைந்துள்ளதால் ஒரே நாளில் 20 காசுகள் குறைத்துள்ளதாகவும், தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைகாலம் துவங்கியுள்ளதால் வரும் நாட்களில் முட்டை விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News