செய்திகள்
தீப் சித்து (கோப்புப்படம்)

செங்கோட்டை முற்றுகை விவகாரம்: தீப் சித்துவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

Published On 2021-02-23 13:29 GMT   |   Update On 2021-02-23 13:29 GMT
செங்கோட்டை முற்றுகைக்கு முக்கிய காரணம் என குற்றம்சாட்டப்பட்ட தீப் சித்துவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி எல்லையில் போராடி வருகின்றனர். கடந்த மாதம் 26-ந்தேதி குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணிகள் நடத்தினர். இப்போது விவசாயிகளின் ஒரு குழுவினர் திடீரென டெல்லி எல்லைக்குள் நுழைந்தனர். போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.

அத்தோடு மட்டுமல்லாமல் விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டனர். செங்கோட்டையின் கூம்பு வடிவிலான கோபுர உச்சியில் ஏறி விவசாய சங்கங்களின் கொடிகளை ஏற்றினர். இது இந்திய அரசுக்கு மிகப்பெரிய அவமானதாக கருதப்பட்டது.

வேளாண் சட்டத்தின்போது வன்முறை வெடித்து, விவசாயிகள் செங்கோட்டைக்கு செல்ல நடிகரும், ஆர்வலருமான தீப் சித்துதான் முக்கிய காரணம். இவர் மோடிக்கு வேண்டப்பட்டவர். பா.ஜனதாதான் வன்முறையை தூண்டி விட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.



இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீப் சித்துவை தேடிவந்தனர். அவரது தலைக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது போலீசார் கடந்த 9-ந்தேி 7 நாட்களும், அதன்பின் 16-ந்தேதி 7 நாட்களும் போலீசார் விசாரணையில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தனர்.

14 நாட்கள் போலீசார் விசாரணை முடிந்ததும், இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

தீப் சித்து மீது போலீசார் வன்முறை, கொலைக்கு முயற்சி செய்தல், கிரிமினல் சதி உள்பட பல பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News