ஆட்டோமொபைல்
பென்ட்லி கார்

முற்றிலும் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் பென்ட்லி

Published On 2020-11-09 10:11 GMT   |   Update On 2020-11-09 10:11 GMT
பென்ட்லி நிறுவனம் முற்றிலும் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டும் உற்பத்தி செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

பென்ட்லி நிறுவனம் பியாண்ட்100 திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பென்ட்லி நிறுவனம் இங்கிலாந்தில் உள்ள தனது கிரீவ் ஆலை தற்சமயம் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்பை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 75 சதவீதம் வரை குறைக்க இருக்கிறது.

பியாண்ட்100 திட்டத்தை நிறைவேற்றி உலகின் முன்னணி ஆடம்பர கார் நிறுவனம் என்ற பெருமையை எட்டுவோம் என பென்ட்லி நிறுவனத்தை சேர்ந்த அட்ரியன் ஹால்மார்க் தெரிவித்தார். 



மேலும் 2030-க்குள் 100 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் 2021 வாக்கில் பெண்ட்யகா ஹைப்ரிட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

2025 வாக்கில் பென்ட்லி தனது முழுமையான எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது ஹை-ரைடிங் கிராஸ்ஒவர் செடான் மாடல் ஆகும். இது வழக்கமான எஸ்யுவி மற்றும் வழக்கமான கார் மாடலாக இருக்கும்.
Tags:    

Similar News