ஆன்மிகம்
ராமர், ஆஞ்சநேயர்,

அனுமனை மெச்சிய ராமன்

Published On 2020-08-07 05:46 GMT   |   Update On 2020-08-07 05:46 GMT
ராமன் மீது அனுமன் கொண்டிருந்த பக்தி, அன்பை ராமாயணம் உயர்வாக எடுத்துக் கூறியுள்ளது. ராமாயணத்தில் அனுமன் சார்ந்த நாலு சம்பவங்களை இங்கு நினைவு கூறுவோம்.
ராமாயணத்தில் அனுமன் சார்ந்த நாலு சம்பவங்களை இங்கு நினைவு கூறுவோம்.

அனுமன் சீதையைத்தேடி இலங்கை செல்ல ஆயத்தமாகிறான். ஆனால் அவன் மனதில் கவலை! தன்னால் கடலைத் தாண்டி இலங்கையை அடைந்து சீதையை கண்டு திரும்ப முடியுமா என்று! அதனை பார்த்த ஜாம்பவான், அனுமனின் சிறுவயது பெருமைகளை நினைவு கூர்ந்து, "நீ சூரியனையே பிடிக்க விண்ணிற்குச் சென்றவன் என்பதை மறந்து விட்டாயா? உனக்கு இது பெரிதல்ல. வெற்றிகரமாய் முடித்துவிட்டு திரும்பிவா...'' என்கிறான்.

உடனே அனுமன் துணிவுபெற்று இலங்கைக்கு பறந்து சென்று, சீதையை சந்தித்து திரும்பும் போது, தன்னுடைய வருகையை ராவணனுக்கு உணர்த்த வேண்டுமென்றே சேட்டைகள் செய்து பிறகு மாட்டுவதுபோல் மாட்டி ராவணனிடம் செல்கிறான். அவன் அனுமனுக்கு வாலில் நெருப்பு வைத்து ஊர்முழுவதும் வலம் வரச் செய்கிறான்.

அப்போது தன் சுய திறûமை வெளிப்படுத்தி, அவர்களிடமிருந்து தப்பி, சில கட்டிடங்களை எரித்தபின், நாடுதிரும்பி, ராமனிடம் நடந்ததை கூறுகிறான். அதனைக் கேட்டு ராமன் வருந்துகிறான். ""நான் செய்யச் சொல்லாததை ஏன் செய்தாய்?'' என கேட்கிறான்.

அப்போது அனுமன், தன் தவறை உணர்ந்து, ""இனி ஒருபோதும் நானாக செயல்பட மாட்டேன்'' என்கிறான். அடுத்து அனுமனை, ராமன் தனது தம்பியர் மயங்கி விழுந்தபோது, "அவர்களை எழச்செய்யும் மூலிகையை பார்த்து வா' என அனுப்புகிறான். உடனே புறப்பட்ட அனுமனை ஜாம்பவான் தடுத்து, ""பார்ப்பதுடன் பறித்து வா''எனவும் கூறுகிறான். காரணம், அனுமனிடம் ராமன் பறித்துவா என கூறவில்லை, பார்த்துவா என்று மட்டும் கூறினான்.

ஆக சொன்னதை செய்து திரும்பினால் பிரயோசனம் இல்லை; என்றுதான் ஜாம்பவான் அனுமனிடம் தெளிவாகக்கூறி அனுப்பினான். சஞ்சீவி மலைக்குச் சென்ற அனுமன் அங்குள்ளவற்றில் எது தேவை என்பதை கண்டு பிடிக்க இயலாமல் மலையையே பிளந்து எடுத்துக் கொண்டு வந்து உயிர்ப்பிக்கிறான்.

அடுத்து ராமன் ஒரு கட்டத்தில் மயில்ராவணனிடம் சண்டையிடும்போது, கட்டுண்டதுபோல் விழுந்து கிடக்கிறான். இதனை பார்த்தான் அனுமன்! இந்தமுறை ராமனின் கட்டளைக்காக காத்திருக்கவில்லை. மாறாக தானே தன் பலத்தை உயர்த்திக் கொண்டு மயில் ராவணனுடன் மோதி, ராமனை விடுவிக்கிறான். ராமனும் அனுமனின் திறமையை மெச்சுகிறான்.

இப்படி ராமன் மீது அனுமன் கொண்டிருந்த பக்தி, அன்பை ராமாயணம் உயர்வாக எடுத்துக் கூறியுள்ளது.
Tags:    

Similar News